Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கவனம் தேவை கனரக சரக்கு வாகனங்கள் வருவதை தவிர்ப்பது நல்லது: நீலகிரி கலெக்டர்

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கவனம் தேவை கனரக சரக்கு வாகனங்கள் வருவதை தவிர்ப்பது நல்லது: நீலகிரி கலெக்டர்

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கவனம் தேவை கனரக சரக்கு வாகனங்கள் வருவதை தவிர்ப்பது நல்லது: நீலகிரி கலெக்டர்

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கவனம் தேவை கனரக சரக்கு வாகனங்கள் வருவதை தவிர்ப்பது நல்லது: நீலகிரி கலெக்டர்

ADDED : ஜூலை 31, 2024 11:06 PM


Google News
ஊட்டி:'மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் கனரக சரக்கு வாகனங்கள் (அத்தியாவசிய பொருட்களை எடுத்து வரும் வாகனங்களைத் தவிர) ஒரு வாரத்திற்கு ஊட்டி மற்றும் கூடலுார் வருவதை தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. 'வானிலை ஆய்வு மையம், ஆக., 2ம் தேதி வரை, மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 'நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக மழை பொழிவு இருக்கும்,' என, அறிவித்துள்ளது.

அதனால், நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிவேக காற்று வீசுவதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்து பாதிப்பு நேரிட வாய்ப்புள்ளது.

இதனால், மாவட்ட நிர்வாக சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் பொருட்டு, பிற மாவட்டம், பிற மாநிலத்திலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதுகாப்பாக வரவேண்டும்.

மேலும், ஊட்டியிலிருந்து கூடலுார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் என்ற இடத்தில் சாலை பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டி மற்றும் கூடலுார் வரும் கனரக சரக்கு வாகனங்கள் (அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைத் தவிர) ஒரு வாரத்திற்கு மலை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us