/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கட்டை கொம்பன் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கட்டை கொம்பன்
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கட்டை கொம்பன்
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கட்டை கொம்பன்
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கட்டை கொம்பன்
ADDED : செப் 23, 2025 08:50 PM
பந்தலுார், ; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் யானை ஒன்று தனியாக சுற்றி திரிகிறது. பகல் நேரத்தில் குடியிருப்புகளை ஒட்டிய புதர்களில் ஓய்வெடுக்கும் இந்த யானை இரவு, 7:00- மணிக்கு மேல் குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுகிறது.
வீட்டு தோட்டங்களில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சத்துணவு மையங்களை உடைத்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களையும் ருசித்து வருகிறது. இந்நிலையில், இரவு தொண்டியாளம் பகுதி குடியிருப்புகள் பகுதிக்கு வந்துள்ளது.
இங்குள்ள வீட்டு வாசல்களில் முகாமிட்டு, கதவுகளை உடைக்க முயற்சித்துள்ளது. வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் சப்தம் எழுப்பி, யானையை விரட்டினர். யானையை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.