ஆதியோகி ரதமஆரத்தி காண்பித்து வழிபாடு
ஆதியோகி ரதமஆரத்தி காண்பித்து வழிபாடு
ஆதியோகி ரதமஆரத்தி காண்பித்து வழிபாடு
ADDED : பிப் 12, 2024 02:00 AM

குன்னுார்:சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவையில் இருந்து குன்னுாருக்கு ஆதியோகி சிவன் ரதம் வந்தது.
வரும் மார்ச், 8ம் தேதி மகா சிவராத்திரி விழாவையொட்டி, கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து, ஆதியோகி ரதம் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று வருகிறது.
அதில், சிவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று குன்னுார் வந்த ஆதியோகி ரதம் இளித்துரை கிராமத்தில் துவங்கி, எடப்பள்ளி, கோடமலை, சிம்ஸ்பார்க், குன்னுார், வி.பி., தெரு, உபதலை, அருவங்காடு பகுதிகளில் நிறுத்தப்பட்டது.
பக்தர்களுக்கு அழைப்பு விடுத்து, அழைப்பிதழ் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ரதத்தில் இருந்த ஆதியோகி சிவனுக்கு பக்தர்கள் ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.
குன்னுார் பகுதிகளுக்கான ஏற்பாடுகளை, ஈஷா மைய குன்னுார் நகர பொறுப்பாளர் முத்துகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், வாசு, விஜயகுமார், கோபால கிருஷ்ணன், ஆகியோர் செய்தனர்.
இதை தொடர்ந்து, ஊட்டி, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலும், ஆதியோகி சிவன் ரத பவனி நடக்க உள்ளது.