/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குட்ஷெப்பர்ட் பள்ளியில் நிறுவனர் தின விழா பார்வையாளர்களை கவர்ந்த சாகசங்கள் குட்ஷெப்பர்ட் பள்ளியில் நிறுவனர் தின விழா பார்வையாளர்களை கவர்ந்த சாகசங்கள்
குட்ஷெப்பர்ட் பள்ளியில் நிறுவனர் தின விழா பார்வையாளர்களை கவர்ந்த சாகசங்கள்
குட்ஷெப்பர்ட் பள்ளியில் நிறுவனர் தின விழா பார்வையாளர்களை கவர்ந்த சாகசங்கள்
குட்ஷெப்பர்ட் பள்ளியில் நிறுவனர் தின விழா பார்வையாளர்களை கவர்ந்த சாகசங்கள்
ADDED : அக் 21, 2025 10:24 PM

ஊட்டி: ஊட்டி, குட்ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் ஆண்டு நிறுவனர் தின விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விளையாட்டு ஆர்வலர் நந்தன் காமத், சந்த்யா குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நந்தன் காமத் கூறுகையில், '' நேர்மை, மரியாதை, நன்றி உணர்வு வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும், குட் ஷெப்பர்ட் பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை திறம்பட அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.'' என்றார். நிகழ்ச்சியில், மாணவர்கள் அணிவகுப்பு, இசைக்குழு நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மலை ஏற்ற திறமைகள் மற்றும் குதிரைச்சவாரி பா ர்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.
குறிப்பாக, குதிரையில் சவாரி செய்தவாறு தரையில் வைக்கப்பட்ட தகடுகளை ஈட்டியால் குத்தி எடு த்தல், தடைகளை தாண்டுதல் உள்ளிட்ட சாகசங்களை செய்து மாணவர்கள் அசத்தினர். 100 அடி உயரத்தில் கம்பியை பிடித்து தொங்கியவாறு ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்லுதல், தலை கீழாக கம்பியில் கீழே இறங்குவது உள்ளிட்ட மலையேற்ற சாகசங்களை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பேக்பைப்பர் இசையுடன் நடைபெற்ற அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பள்ளி தலைவர் ஜேக்கப் தாமஸ், மூத்த துணைத் தலைவர் சாரா ஜேக்கப், பள்ளி நிர்வாகி வினோத் சிங், தலைமையாசிரியை தீபா சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


