ADDED : பிப் 12, 2024 12:19 AM
கோவில்பாளையம்:பா.ஜ., நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 38. பா.ஜ., எஸ்.எஸ்.குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர். நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு வெள்ளானைபட்டியில் நீலம்பூர் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. இரவு 10:00 மணிக்கு மேல் மது விற்பது குறித்து கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறைக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து சுரேஷ் குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார், டாஸ்மாக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பா.ஜ., எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் ஜானகிராமன் கூறுகையில், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் தாமதப்படுத்துகின்றனர், என்றார்.