/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரி மாவட்ட சிறப்பு தேயிலை துாள்களுக்கு விருது நீலகிரி மாவட்ட சிறப்பு தேயிலை துாள்களுக்கு விருது
நீலகிரி மாவட்ட சிறப்பு தேயிலை துாள்களுக்கு விருது
நீலகிரி மாவட்ட சிறப்பு தேயிலை துாள்களுக்கு விருது
நீலகிரி மாவட்ட சிறப்பு தேயிலை துாள்களுக்கு விருது
ADDED : செப் 25, 2025 11:32 PM
குன்னுார்; நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம் மற்றும் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் மற்றும் பங்குதாரர்களின் ஆதரவுடன், கேரள மாநிலம் கொச்சியில், இந்திய சர்வதேச தேயிலை, 8வது மாநாடு நடத்தப்பட்டது. முதல்முறையாக சிறப்பு தேயிலை தூள் தயாரிப்பவர்களுக்கு சிறப்பு தேயிலை போட்டி நடத்தப்பட்டது.
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) செயலாளர் சஞ்சித் கூறியதாவது:
இந்த மாநாட்டில், 'பிளாக் டீ., ஒயிட் டீ., பச்சை மற்றும் ஊலாங் டீ' என, நாட்டின் சிறந்த தேயிலை தோளின் பன்முகத்தன்மை மற்றும் கைவினை திறன், சுவை அமர்வு அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில், 'பாரி அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (சி.டி.சி.,); கேர் பெட்டா எஸ்டேட் (ஆர்த்தோடக்ஸ்); கண்ணன் தேவன் பிளான்டேஷன் (கிரீன் டீ ); கிளண்டேல் எஸ்டேட் (ஒயிட் டீ ) ஆகியவை தங்க விருதுகளை வென்றன.
மேலும், ரியல் அஸ்ஸாம் டீ இன்டஸ்ட்ரீஸ் (சி.டி.சி.,); கிளன்பர்ன் டீ டிஎல். எக்ஸ் லிமிடெட் (ஆர்த்தோடக்ஸ்); அவெட்டா பீவரேஜஸ் (கிரீன் டீ); பாரி ஆக்ரோ (ஊலாங்) ஆகியவை வெள்ளி விருதுகளை வென்றன.
கூட்டாங்கா டீ எஸ்டேட்(சிடிசி); பாரி ஆக்ரோ (ஆர்த்தோடக்ஸ்); அவெட்டா பீவரேஜஸ் (கிரீன் டீ) ஆகியவை வெண்கலம் விருதுகள் பெற்றன. சிறப்பு சாம்பியன் விருது கேர்பெட்டா எஸ்டேட் பெற்றது. விழாவில் வெற்றியாளர்கள் கவுர விக்கப்பட்டனர்,'' என்றார்.