Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நகரெங்கும் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் ; சர்வதேச சுற்றுலா தல அந்தஸ்தை இழந்து வரும் ஊட்டி

நகரெங்கும் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் ; சர்வதேச சுற்றுலா தல அந்தஸ்தை இழந்து வரும் ஊட்டி

நகரெங்கும் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் ; சர்வதேச சுற்றுலா தல அந்தஸ்தை இழந்து வரும் ஊட்டி

நகரெங்கும் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் ; சர்வதேச சுற்றுலா தல அந்தஸ்தை இழந்து வரும் ஊட்டி

ADDED : ஜூன் 20, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
ஊட்டி : ஊட்டி நகரில் எங்கு பார்த்தாலும் வழிந்தோடும் கழிவுநீரால் சர்வதேச சுற்றுலா அந்தஸ்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. நடப்பாண்டு மார்ச் மாதம் கணக்கெடுப்பின்படி, 1.30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில், 28 வார்டுகள் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகிவிட்டதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

400 மேனுவலில் அடைப்பு


இதனால், பாதாள சாக்கடை திட்டத்தில் பொருத்தப்பட்ட குழாய்கள், கட்டமைப்புகள் அனைத்தும் வலுவிழந்துள்ளது. தற்போது, ஊட்டி நகரில் அரை மணி நேரம் கன மழை பெய்தால், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவுநீர் வெளியேறி நகர் முழுவதும் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவது வாடிக்கையாகிவிட்டது.

பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து காணப்படுகிறது. மேலும், கால்வாயில் வீசி எறியப்படும் குப்பை கழிவுகள் குழாய்களில் சென்று அடைப்பு ஏற்படுவதால் எந்நேரமும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

சிரமப்படும் நகராட்சி ஊழியர்கள்


தகவலின் பேரில், பிரத்யேக வாகனம் மூலம் வார்டுகளுக்கு சென்று நகராட்சி ஊழியர்கள் மேனுவலில் பைப் பொருத்தி கழிவு நீரை வெளியேற்றி அடைப்பை சரி செய்து வருகின்றனர். சில பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட குழாய் என்பதால் அடிக்கடி கழிவுநீர் மேனுவலில் நிரம்பி வெளியேறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. சமீபத்திய ஆய்வில், ஊட்டி நகர் பகுதியில் மட்டும், 400 மேனுவல் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு பழுதாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சுற்றுலா நகரில் அவலம்


ஊட்டிக்கு ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பயணிகள் நடமாடும் நகரின் முக்கிய இடங்களான, கமர்சியல் சாலை, ஏ.டி.சி., மத்திய பஸ் ஸ்டாண்ட், சேரிங்கிராஸ், ஸ்பென்ஷர் சாலை, மெயின் பஜார், லோயர் பஜார், அப்பர்பஜார், ஸ்டேட் பாங்க் நடைப்பாதை, ஏ.டி.சி., யிலிருந்து பஸ் ஸ்டாண்ட் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைகின்றனர்.

அதேபோல், அனைத்து வார்டுகளில் சேதமடைந்த சாலை, இடிந்து காணப்படும் நடைப்பாதை, போதிய தெருவிளக்குகள் இல்லை, குடிநீர் சப்ளையில் குறைப்பாடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படாமல் சுணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது.

இதனை சீர்படுத்த வேண்டிய கட்டாயம் நகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை...

நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,''ஊட்டியில் கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை பிரச்னைகள் இருந்து வருகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் புதுபித்து புதிய கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. இங்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை அரசுக்கு அனுப்பி, அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us