/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம் தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்
தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்
தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்
தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்
ADDED : அக் 15, 2025 10:54 PM

மஞ்சூர்: எடக்காடு - கன்னேரி சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் காலை நேரத்தில் உலா வரும் கரடியால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மஞ்சூர் அருகே எடக்காடு கன்னேரி சாலையில், தேயிலை தோட்டத்தில் அவ்வப்போது கரடி உலா வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணியளவில் தேயிலை தோட்டத்தில் அமர்த்திருந்த கரடியை பஸ்சில் சென்றவர்கள் 'போட்டோ' எடுத்துள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'அடிக்கடி இங்கு வந்து தேயிலை தோட்டத்தில் கரடி அமர்ந்து இருக்கிறது. இதனால் பசுந்தேயிலை பறிக்க தொழிலாளர்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டியுள்ளது. வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.


