/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோத்தகிரியில் கடும் குளிரில் முட்டைகோஸ் அறுவடை கோத்தகிரியில் கடும் குளிரில் முட்டைகோஸ் அறுவடை
கோத்தகிரியில் கடும் குளிரில் முட்டைகோஸ் அறுவடை
கோத்தகிரியில் கடும் குளிரில் முட்டைகோஸ் அறுவடை
கோத்தகிரியில் கடும் குளிரில் முட்டைகோஸ் அறுவடை
ADDED : ஜூன் 20, 2025 06:29 AM

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் கடும் குளிரிலும் முட்டைகோஸ் அறுவடை, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, நீர் ஆதாரம் உள்ள நிலங்களில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், சுக்கினி, புருக்கோலி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன. கோத்தகிரி பகுதியில், காய்கறி பயிரிடும் பரப்பளவு சற்று அதிகமாக உள்ளது.
கோத்தகிரி நெடுகுளா, கதகுதொரை, கட்டபெட்டு மற்றும் கூக்கல்தொரை பகுதிகளில், நடப்பாண்டு, கணிசமான பரப்பளவில் முட்டை கோஸ் பயரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். தற்போது, மேகமூட்டமான காலநிலை நிலவினாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், தோட்டங்களில் முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராகி வருகிறது. மழை தொடரும் பட்சத்தில், தாழ்வான பகுதியில் பயிரிட்டுள்ள முட்டைக்கோஸ், தண்ணீரில் மூழ்கி அழிந்து விடும் நிலை உள்ளது.
தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளில், ஒரு கிலோ முட்டைகோஸ்,15 முதல், 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உள்ளூர் மார்க்கெட்களில், 20 முதல், 25 ரூபாய் வரை தரத்துக்கு ஏற்ப விற்கப்படுறது. இந்த விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், மழை தீவிரமடைவதற்கு முன்பு, தயாரான முட்டைக்கோஸ் அறுவடையை, விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.