/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காரை 30 அடி பள்ளத்தில் உருட்டி அந்தரத்தில் தொங்கிய சரக்கு லாரி காரை 30 அடி பள்ளத்தில் உருட்டி அந்தரத்தில் தொங்கிய சரக்கு லாரி
காரை 30 அடி பள்ளத்தில் உருட்டி அந்தரத்தில் தொங்கிய சரக்கு லாரி
காரை 30 அடி பள்ளத்தில் உருட்டி அந்தரத்தில் தொங்கிய சரக்கு லாரி
காரை 30 அடி பள்ளத்தில் உருட்டி அந்தரத்தில் தொங்கிய சரக்கு லாரி
ADDED : ஜூன் 23, 2025 04:36 AM

குன்னுார்: குன்னுார்- ஊட்டி சாலையில் அதிவேகத்தில் வந்த லாரி நிறுத்தி வைத்த கார் மீது மோதி, அந்தரத்தில் நின்றது.
குன்னுார் ஜெகதளா பாலாஜி நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் லாரி அருவங்காட்டில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நேற்று பொருட்களை ஏற்ற காலியாக சென்றது. டிரைவர் ஹரி, 38, கிளீனர் செபஸ்டியன் சென்றனர்.
அருவங்காடு சி.டி.சி., காலனி அருகே அதிவேகத்தில் சென்ற லாரி, சிறிய தடுப்பை உடைத்து, அங்கு பார்க்கிங் கட்டடத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது மோதி, அந்தரத்தில் நின்றது. இதில், கார், 30 அடி பள்ளத்தில் உருண்டது. காயமடைந்த இருவரும் குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்தியதை நேரில் பார்த்த மக்கள், இருவரும் குடிபோதையில் அதிவேகத்தில் வந்ததாக, போலீசாரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இரு கிரேன்கள் வரவழைத்து, ஒரு மணி நேரம் போராடி, லாரி, காரை மீட்டனர். ஹைவே பட்ரோல் போலீசார், போக்கு வரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.