Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/என்.சி.எம்.எஸ்., கடைகளை டெண்டர் விடுவதில் தொடர் தாமதம்! இழுபறியால் உள்ளூர் சிறு வியாபாரிகள் தவிப்பு

என்.சி.எம்.எஸ்., கடைகளை டெண்டர் விடுவதில் தொடர் தாமதம்! இழுபறியால் உள்ளூர் சிறு வியாபாரிகள் தவிப்பு

என்.சி.எம்.எஸ்., கடைகளை டெண்டர் விடுவதில் தொடர் தாமதம்! இழுபறியால் உள்ளூர் சிறு வியாபாரிகள் தவிப்பு

என்.சி.எம்.எஸ்., கடைகளை டெண்டர் விடுவதில் தொடர் தாமதம்! இழுபறியால் உள்ளூர் சிறு வியாபாரிகள் தவிப்பு

UPDATED : டிச 05, 2025 09:07 AMADDED : டிச 05, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
ஊட்டி: ஊட்டி எம்.சி.எம்.எஸ்., வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கடைகளை டெண்டர் விடுவதில் ஏற்படும் தாமதத்தால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, 20க்கும் மேற்பட்ட புதிய கடைகள் கட்டப்பட்டன. கட்டப்பட்ட புதிய கடைகளில் கூட்டுறவு, ஆவின் நிர்வாகங்களுக்கு கடைகள் ஒதுக்கிய பின், மீதமுள்ள கடைகள் வியாபாரிகளுக்கு டெண்டர் விட்டு ஒதுக்க கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்தது.

கடந்த அ.தி.மு.க.., ஆட்சியில் குறிப்பிட்ட கடைகளை ஒதுக்குவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. அதன் பின், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், முறையாக டெண்டர் விட்டு கடைகள் ஒதுக்கப்படும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.

அதில், 'பொருளாதாரத்தில் பின் தங்கிய உண்மையான வியாபாரிகள் பயனடையும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சிறு வியாபாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில், 'டெண்டர் விடாமலும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடை ஒதுக்க வேண்டும்,'என, ஆளுங்கட்சியினர் சிலர் நிர்பந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக காத்திருந்த வியாபாரிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. ஆளுங்கட்சி தலையீடால், அதிகாரிகளும் செய்வதறியாமல் இருந்தனர்.

இதனால், கட்டப்பட்ட புதிய கடைகள் அனைத்தும் சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இதனால், கோடை சீசன் சமயங்களில் கடைகள் வைக்க முடியாமல், இதனை நம்பி வாழ்ந்து வந்தவர்கள் அவதிப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உட்பட பல்வேறு கூட்டுறவு அதிகாரிகள் வரை மனுப்போர் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை.

விரைவில் டெண்டர் மீண்டும் மாநில முதல்வரின் தனிப்பிரிவுக்கு சிறு வியாபாரிகள் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது. தொடர்ந்து, டெண்டர் ஆவணங்கள் மீண்டும் எடுக்கப்பட்டு பணிகளை அதிகாரிகள் துவக்கிய நிலையில், மீண்டும் அரசியவாதிகளின் நிர்பந்தம் காரணமாக, டெண்டர் பணி இழுப்பறியில் உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா கூறுகையில்,''ஊட்டி எம்.சி.எம்.எஸ்., புதிய கடைகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட பல்வேறு நிர்பந்தங்களால் தாமதம் ஏற்பட்டது. விரைவில் முறையாக டெண்டர் விட்டு கடைகளை சிறு வியாபாரிகளுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதில், யாரின் தலையீடும் இருக்காது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us