ADDED : அக் 23, 2025 10:40 PM

குன்னூர்: குன்னூரில் இரு இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
குன்னூரில் பெய்து வரும் கன மழையால், வெலிங்டன் சப்ளை டிப்போ மற்றும் பந்துமை சாலைகளில் அதிகாலையில் மரங்கள் விழுந்தன.
குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், வெட்டினர். பொக்லின் வரவழைத்து மரம் அகற்றப்பட்டது. இதனால் ராணுவ பகுதிகளில் காலை, 8:00 மணியளவில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


