/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேசிய நெடுஞ்சாலையோரம் சேதமடைந்த தடுப்புகள் தேசிய நெடுஞ்சாலையோரம் சேதமடைந்த தடுப்புகள்
தேசிய நெடுஞ்சாலையோரம் சேதமடைந்த தடுப்புகள்
தேசிய நெடுஞ்சாலையோரம் சேதமடைந்த தடுப்புகள்
தேசிய நெடுஞ்சாலையோரம் சேதமடைந்த தடுப்புகள்
ADDED : செப் 23, 2025 08:56 PM

கூடலுார்,; முதுமலை வழியாக செல்லும், மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சேதமடைந்த இரும்பு தடுப்புகள் சீரமைக்காததால் வாகன விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இதில், தொரப்பள்ளி முதல் தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்கிறது. இப்பகுதியில், விபத்துகளை தடுக்க ஆபத்தான சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.
கார்குடி அருகே, வளைவான பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடகா அரசு பஸ் விபத்துக்குள்ளானது. பஸ் மோதியதில் சாலையோர இரும்பு தடுப்பு சேதமடைந்தது. சமீபத்தில் அபயாரண்யம் பாலம் அருகே, கர்நாடக அரசு பஸ், சுற்றுலா வாகனம் மோதிய விபத்தில், பாலத்தை ஒட்டிய இரும்பு தடுப்புகள் சேதமடைந்தது.
இதே போன்று பல பகுதிகள், இரும்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலை தமிழக, கர்நாடக, கேரளா இன்றைக்கு முக்கிய வழிதடமாகும். இச்சாலை இரவு, 9:00 மணி முதல் காலை, 6:00 வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பகல் நேரங்களில், வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சேதமடைந்த இரும்பு தடுப்புகள் சீரமைக்காததால், வாகன விபத்துகள் ஆபத்து உள்ளது. எனவே, அவைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.