/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம் தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
ADDED : செப் 24, 2025 11:39 PM

குன்னுார்: குன்னுாரில் தீயணைப்பு துறையினரின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
குன்னுாரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போதும் தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் கால மீட்பு குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர்.
தீ விபத்தின் போது, 'துரிதமாக செயல்பட்டு அணைப்பது; புகைமூட்டங்களுக்குள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தி உள்ளே சென்று மீட்பது; கட்டடங்கள் மீது ஏறுவது,' உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்கள் அளித்தனர். வரும் அக். முதல் டிச., வரையில் வடகிழக்கு பருவ மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
நிலை அலுவலர் குமார் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர்கள் சுப்ரமணி, முரளி, கண்ணன் உட்பட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.