Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ படகு இல்லத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி; வடகிழக்கு பருவமழை எதிரொலி

படகு இல்லத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி; வடகிழக்கு பருவமழை எதிரொலி

படகு இல்லத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி; வடகிழக்கு பருவமழை எதிரொலி

படகு இல்லத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி; வடகிழக்கு பருவமழை எதிரொலி

ADDED : செப் 25, 2025 11:34 PM


Google News
ஊட்டி,; வடகிழக்கு பருவமழையை ஒட்டி தீயணைப்புத் துறையினர், ஊட்டி படகு இல்லத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்., வரை தென்மேற்கு பருவமழை, அக்., முதல் டிச., வரை வடகிழக்கு பருவமழை, ஜன., மே மாதங்களில் கோடை மழை பெய்வது வழக்கம். நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்தது.

அக்., இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பருவ மழையை ஒட்டி சாலைகளை சீரமைத்தல், ஆறுகளை துார்வாருதல் உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்தந்த துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் உத்தரவின் பேரில், ஊட்டி நிலைய அலுவலர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர், 'வடகிழக்கு பருவமழை சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களையும், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது,' குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை ஊட்டி படகு இல்ல வளாகத்தில் நடத்தினர்.

வெள்ள அபாயத்தின் போது, தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பு பொதுமக்கள் தற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சியின் போது, அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us