/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடியிருப்பு பகுதியில் மரநாய்; மீட்டு விடுவித்த வனத்துறை குடியிருப்பு பகுதியில் மரநாய்; மீட்டு விடுவித்த வனத்துறை
குடியிருப்பு பகுதியில் மரநாய்; மீட்டு விடுவித்த வனத்துறை
குடியிருப்பு பகுதியில் மரநாய்; மீட்டு விடுவித்த வனத்துறை
குடியிருப்பு பகுதியில் மரநாய்; மீட்டு விடுவித்த வனத்துறை
ADDED : செப் 25, 2025 11:41 PM

குன்னுார்; குன்னுாரில் குடியிருப்பு பகுதிக்கு வந்த மரநாயை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல்லுயிரிகள் அதிக அளவில் உள்ளன. இதேபோல, அழிவின் பிடியில் உள்ள அரிய விலங்குகள் அவ்வப்போது ஆங்காங்கே தென்படுகின்றன. இந்நிலையில், குன்னுார் புரூக்லேண்ட் பகுதியில் அரிய வகை விலங்கு சுற்றி திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், வனச்சரக ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கிருந்த மரநாயை மீட்டு சிம்ஸ்பூங்கா அருகே உள்ள காப்புக்காட்டில் விடுவித்தனர்.