/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மரங்கள் வளர்க்கும் குழுவினரை பாராட்டிய முன்னாள் மாணவர்கள் மரங்கள் வளர்க்கும் குழுவினரை பாராட்டிய முன்னாள் மாணவர்கள்
மரங்கள் வளர்க்கும் குழுவினரை பாராட்டிய முன்னாள் மாணவர்கள்
மரங்கள் வளர்க்கும் குழுவினரை பாராட்டிய முன்னாள் மாணவர்கள்
மரங்கள் வளர்க்கும் குழுவினரை பாராட்டிய முன்னாள் மாணவர்கள்
ADDED : செப் 18, 2025 08:53 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலமூலா அரசு பள்ளியில், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வரும் குழுவினருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
பந்தலுார் அருகே அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், முன்னாள் மாணவர்கள் சார்பில், 'வேருக்கு நீரு 2025' எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மனோஜ் வரவேற்றார்.
பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போதைய தலைமை ஆசிரியருமான மோகன் தலைமை வகித்து பேசுகையில், ''பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி துாய்மை காவலர்கள் உதவியுடன் சீரமைத்தனர்.
இங்கு பல்வேறு வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த மரங்களை பராமரித்து கோடைகாலங்களில் தண்ணீர் ஊற்றி, அவை வாடி போகாமல் வளர்க்கும் பணியில் பலரும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இந்த பணி மேற்கொண்டு பள்ளி வளாகத்தை ஒரு சோலைவனமாக மாற்றும் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், இந்தப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபடும் தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டுவது பெருமையாக உள்ளது,'' என்றார்.
தொடர்ந்து, முன்னாள் மாணவரும் தலைமை ஆசிரியருமான வினோத் பேசினார்.
நிகழ்ச்சியில், 4- துாய்மை காவலர்கள், 77 பணியாளர்கள் மற்றும் 30 ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியை விஜயா, துணை தலைமை ஆசிரியர் முகமது உட்பட பலர் பேசினர்.