/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தற்காலிக சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலை துறை தற்காலிக சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலை துறை
தற்காலிக சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலை துறை
தற்காலிக சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலை துறை
தற்காலிக சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலை துறை
ADDED : செப் 24, 2025 11:44 PM

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் குழிகளாக மாறிய சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்காலிக சீரமைப்பு பணி நடந்தது.
பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் சாலையில், பெரும்பாலான இடங்களில் தொடர் மழையின் காரணமாக, சாலையில் குழிகள் உருவாகி உள்ளன. இதனால், வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி பழுது ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வந்தனர். இரவு நேரங்களில் வெளியூர் பயணிகள் வேகமாக வாகனங்களை இயக்கும் போது, சாலையின் நிலை தெரியாமல் கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் சிக்கி விடுகின்றன. 'மிகவும் சேதமடைந்த இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்,' என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொக்லைன் உதவியுடன் சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு, பள்ளமான சாலை சமன் படுத்தப்பட்டது. மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணி நடப்பதால், கன மழை பெய்தால் சாலை மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால், இப்பகுதிகளை நிரந்தரமாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை முன் வரவேண்டும்,' என்றனர்.