Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

UPDATED : ஜூன் 26, 2024 07:37 AMADDED : ஜூன் 26, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நேற்று துவங்கிய மழை, இடைவெளியின்றி பெய்து வருகிறது. கூடலூர் தேவர்சோலை சாலை, 4வது மைல் அருகே, இரவு 8:40 மணிக்கு மூங்கில் தூர் சாலையில் விழுந்தது.

Image 1285930இதே சாலையில் 3வது மைல் மீனாட்சி அருகே, இரவு 9:30 மணிக்கு, கூடலூரில் இருந்து பாடந்துறை சென்ற பைக் மீது மரம், மின் கம்பம் சாய்ந்து, பைக் சேதமடைந்தது; அதில், பயணித்த பாடந்துறையை சேர்ந்த இப்ராஹீம், 32, என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவர், சிகிச்சிக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதன் காரணமாக, தமிழக - கேரளா இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டது.

Image 1285932கூடலூர் வருவாய் துறை அலுவலர் கல்பனா, வி.ஏ.ஓ., பார்வதி, ராஜேஷ் வருவாய்த்துறை ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் உதவியுடன், சாலையில் சாந்த மூங்கில் மற்றும் மரத்தை அகற்றி இரவு 11:00 அகற்றினர். தொடர்ந்து, போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Image 1285934இதனிடையே, இரவு 3வது பகுதியில், காட்டு யானை சாலை நின்றதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டுநர்கள் சப்தமிட்டு யானையை விரட்டினர். யானை வனப்பகுதிக்கு சென்றதைத் தொடர்ந்து வாகனங்களை இயக்கினார்.

தொடர் மழையினால், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, மாவட்ட கலெக்டர் அருணா விடுமுறை அறிவித்துள்ளார்.

இன்று காலை வரை தேவாலாவில் அதிகபட்சமாக 186 மி.மீ., கூடலூர் - 148 மி.மீ., மேல்கூடலூர் - 142 மி.மீ., பாடந்துறை - 90 மி.மீ., ஓவேலி - 88 மி.மீ., செறுமுள்ளி - 69 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us