Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வரும் 15ல் பிறந்தநாளை கொண்டாட அழைப்பு மலை ரயில்-150! நிலக்கரி நீராவி இன்ஜினை இயக்கினால் மகிழ்ச்சி

வரும் 15ல் பிறந்தநாளை கொண்டாட அழைப்பு மலை ரயில்-150! நிலக்கரி நீராவி இன்ஜினை இயக்கினால் மகிழ்ச்சி

வரும் 15ல் பிறந்தநாளை கொண்டாட அழைப்பு மலை ரயில்-150! நிலக்கரி நீராவி இன்ஜினை இயக்கினால் மகிழ்ச்சி

வரும் 15ல் பிறந்தநாளை கொண்டாட அழைப்பு மலை ரயில்-150! நிலக்கரி நீராவி இன்ஜினை இயக்கினால் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 05, 2024 12:51 AM


Google News
குன்னுார்:'குன்னுார் -மேட்டுப்பாளையம் மலை ரயிலுக்கு வரும், 15ம் தேதி 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் வேளையில், நிலக்கரி நீராவி இன்ஜினை இயக்க வேண்டும்,' என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1854ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மலை ரயில் பாதை அமைக்கும் பணி, நீலகிரி ரயில்வே கம்பெனியால் துவக்கப்பட்டது. 1899ல், ஜூன், 15ம் தேதி 'மெட்ராஸ் ரயில்வே' சார்பில் மலை ரயில் போக்குவரத்து சேவை துவங்கியது. தொடர்ந்து, 24.40 லட்சம் ரூபாய் மதிப்பில், குன்னுார் முதல் ஊட்டி வரை அமைக்கப்பட்ட ரயில் பாதையில், 1908ல் அக். 15ல் போக்குவரத்து துவங்கியது.

'மீட்டர் கேஜ்' பிரிவு


அதில், மீட்டர் கேஜ் பிரிவில், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை, 46.61 கி.மீ., துாரம் கொண்ட இந்த ரயில் பாதையில், 208 வளைவுகள், 250 பாலங்கள், 16 சுரங்கங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம், கல்லார், ஆடர்லி, ஹில் குரோவ், ரன்னிமேடு, குன்னுார், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல், ஊட்டி ஸ்டேஷன்கள் இருந்தாலும், தற்போது, 3 ஸ்டேஷன்கள் மட்டுமே பிரசித்தி பெற்றதாக உள்ளது.

யுனெஸ்கோ அந்தஸ்து


குறிப்பாக, 'தமிழ், இந்தி, ஆங்கிலம்' என, பல மொழி சினிமாக்களில் மலைரயில் இடம்பிடித்துள்ளது. தற்போதும் 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின்கள் மூலம், நம் நாட்டில் மீட்டர்கேஜ் பாதையில் இயங்கும் பெருமையும், 2005ல் 'யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்ற பெருமையும் இந்த மலை ரயிலுக்கு உள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஒரு முறையாவது மலை ரயிலில் பயணம் செய்வது இன்றளவு தொடர்கிறது.

மேலும், உலகில் மலை ரயில்களுக்கு, மேட்டில் இருந்து தாழ்வான பகுதிக்கு, 8க்கு ஒரு அடி இறக்கம் என்ற அளவில் தாழ்வாக பல்சக்கரத்தில், 'ரேக் பார்'கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு மட்டுமே, 12.5 அடி நீளத்திற்கு ஒரு அடி இறக்கம் கொண்ட வகையில் உள்ளதால், ஆசியாவில் மிகவும் நீளம் கொண்ட 'ரேக் பார்' என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பாரம்பரியமிக்க மலை ரயில் மேம்பாட்டுக்கு, 25 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி ரயில் நிலையங்களில் பணிகள் நடந்து வருகிறது.

ஆறு இன்ஜின்கள்


கடந்த, 2003ம் ஆண்டுக்கு பிறகு, பொன்மலையில் உருவான 'பர்னஸ்' ஆயிலால் இயங்கும், 3 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின்கள் சமீபத்தில் டீசலுக்கு மாற்றி தற்போது இயக்கப்பட்டு வருகிறது. ஒரு புதிய டீசல் இன்ஜின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு திருச்சி பொன்மலை பணிமனையில், உருவாக்கப்ட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் மேட்டுப்பாளையத்தில் பயனி இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரித்த முதல் எக்ஸ்கிளாஸ் இன்ஜின் (37384) தற்போதும் உயிரோட்டத்துடன் இருந்தும் இங்குள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் மேட்டுப்பாளையத்தில் வீணாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி மலை ரயில் தினம் கொண்டாடும் நிலையில், இதற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,''உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த ரயிலின், 150வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, நிலக்கரி நீராவி இன்ஜினை இயக்கி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வேண்டும். சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு கூடுதல் மலை ரயில்கள் இயக்க வேண்டும். 150 வது ஆண்டு சிறப்பாக கொண்டாட ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us