/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தண்ணீர் குழாய்கள் பதிக்க குழி விரைவாக மூடினால் பயன் தண்ணீர் குழாய்கள் பதிக்க குழி விரைவாக மூடினால் பயன்
தண்ணீர் குழாய்கள் பதிக்க குழி விரைவாக மூடினால் பயன்
தண்ணீர் குழாய்கள் பதிக்க குழி விரைவாக மூடினால் பயன்
தண்ணீர் குழாய்கள் பதிக்க குழி விரைவாக மூடினால் பயன்
ADDED : செப் 24, 2025 11:41 PM
கோத்தகிரி: 'கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்க, தோண்டப்பட்டுள்ள குழியை, விரைந்து மூட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோத்தகிரி நகராட்சி குடியிருப்புகளுக்கு, தனித்தனியாக இணைப்பு வழங்கும் வகையில், 'அம்ருத்' குடிநீர் வினியோகம்' திட்டத்தின் கீழ், 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன.
அதன்படி, கோத்தகிரி ராம்சந்த் குடிநீர் வினியோக தொட்டியில் இருந்து, தாழ்வான பகுதிக்கு, பெரிய குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. பகுதி பணி நிறைவடைந்துள்ள நிலையில், விடுபட்ட பணிக்காக, குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. மிகவும் குறுகலான சாலையில், போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால், வாகனங்கள் சென்று வரவும், மக்கள் நடந்து செல்லவும் இடையூறாக உள்ளது.
தவிர, ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகள் சமன் செய்யப்படாமல் உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் உள்ள குழியை சமம் செய்து 'கான்கிரீட்' தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.