தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புலிக்கு வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

புலிக்கு வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

புலிக்கு வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது


ADDED : ஜூன் 01, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: கேரளா மாநில, மலப்புரத்தில் புலியை பிடிக்க வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

கேரளா மாநிலம், மலப்புரம் கருவாரக்குண்டு ரப்பர் தோட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி சிறுத்தைகள் ஊருக்குள் வருவதை மக்கள் பார்த்துள்ளனர். கடந்த வாரத்தில் ரப்பர் எஸ்டேட்டில் ரப்பர் வெட்டும் பணிக்கு சென்ற, அப்துல் கபூர், 50, என்பவர் புலி தாக்கி உயிரிழந்தார். வனத்துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கால்நடை டாக்டர் அருண்சக்கரியா மேற்பார்வையில், 100க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள், 10 இடங்களில் கூண்டுகளை வைத்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் புலியை பிடிக்க வைத்த கூண்டில், சிறுத்தை ஒன்று சிக்கியது. சிறுத்தை, வளர்ப்பு ஆடுகள், நாய்களை தாக்கி சென்ற நிலையில், சிறுத்தை சிக்கியதில் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். புலியை பிடித்தால் மக்கள் முழு நிம்மதி அடைவர் என, இப்பகுதியினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us