Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்'; கலெக்டர் முகாமிட்டு ஆய்வு

'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்'; கலெக்டர் முகாமிட்டு ஆய்வு

'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்'; கலெக்டர் முகாமிட்டு ஆய்வு

'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்'; கலெக்டர் முகாமிட்டு ஆய்வு

ADDED : பிப் 01, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்:உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் முகாமிட்டு கள ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

அதன் படி கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நேற்று மேட்டுப்பாளையம் தாலுக்காவில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் துவங்கப்பட்டது.

காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் திட்டத்தினை துவங்கி வைத்தார். பின் மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனன், அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கலெக்டர வந்தார்.அப்போது, சிகிச்சைக்கு வந்த நாய்குட்டியின் உரிமையாளரிடம் மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக அளிக்கப்படுகிறதா, நாய் குட்டிக்கு என்னவாயிற்று ஏன் கொண்டு வந்திருக்கிறீர்கள் என அக்கறையுடன் கேட்டார்.

கால்பந்து விளையாடிய கலெக்டர்


பின் மணி நகரில் உள்ள அறிவுசார் மையத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின் எதிரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி சென்று அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அப்போது மாணவவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சென்ற கலெக்டர் கிராந்திகுமார் அங்கு ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் உட்கோட்ட டி.எஸ்.பி., பாலாஜி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி, ஆவணங்களை ஆய்வு செய்தார்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் மாவட்டத்தின் பல்வேறு துறை முதன்மை அதிகாரிகள், முகாமிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

ஜடையம்பாளையம் ஊராட்சித் தலைவர் பழனிசாமி விடுத்த கோரிக்கை மனுவில், ஆலாங்கொம்பு பழையூரில் இருந்து, குத்தாரிபாளையம், வெள்ளிபாளையம் ஆகிய ஊர்களுக்கும், விவசாய தோட்டங்களுக்கும் செல்லும் பாதையில், ஓராண்டுக்கு மேலாகியும் சாலை போட முடியாமல் உள்ளது. எனவே இடத்தை அளந்து சாலை போட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்க கோரியும், அதிக அளவில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us