
தேவையான பொருட்கள்:
n பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப்n பால் - அரை லிட்டர்n திக்கான தேங்காய் பால் - ஒரு டம்ளர்n சர்க்கரை - ஒரு கப்n ஏலக்காய்த்துாள் - ஒரு டீஸ்பூன்n எண்ணெய் - பொரிப்பதற்குn உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி இறக்கி, சிறிது ஆற விட வேண்டும். அத்துடன், தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்துாள் சேர்த்துக் கலந்து வைக்கவும். பச்சரிசியையும் உளுந்தையும் ஐந்து மணி நேரம் நன்றாக ஊற வைத்து, அரைக்கவும். மாவு, கெட்டியாக இருக்க வேண்டும். மாவு புளிக்கக்கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும்.
வாணலியின் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். அரைத்த மாவை, சின்ன சின்ன உருண்டைகளாக பொரித்தெடுத்துக்கொள்ளவும். வெள்ளை நிறமாக இருக்கும்போதே எடுக்கவேண்டும்.
பொரித்து எடுத்த பணியாரங்களை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும். பத்து நிமிடங்கள் கழித்து, பரிமாறலாம். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக்கூடாது. பரிமாறுவதற்கு, பத்து நிமிடம் முன்பு பாலில் சேர்க்க வேண்டும்.