/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : பிப் 12, 2024 01:21 AM

குன்னுார்;நீலகிரி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம்; அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மனமகிழ் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி அருவங்காடு கிளப்பில் நடந்தது.
அதில், அருவங்காடு, கோத்தகிரி, கூடலுார் உட்பட பல பகுதிகளில் இருந்து டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையரில், விமல் ஆரோக்கியநாதன்; ஆண்கள் இரட்டையரில் பிரசாந்த், தனுஷ்ராஜ்; இடைநிலை ஒற்றையரில் ஹரிதரன்; பதக்கம் பெறாத ஒற்றையரில் ஹரிதரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மாணவர் பிரிவில், 11 வயதுக்குட்பட்டோரில் அருவங்காட்டை சேர்ந்த கவிஷ்; 13 வயதுக்குட்பட்டோரில் கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவன் இஷான்; 15 வயதுக்குட்பட்டோரில் அருவங்காடு ரோகித் கிப்சன்; 17 வயதிற்கு உட்பட்டோரில் கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி மாணவர் சுதர்சன் வெற்றி பெற்றனர்.
மாணவியர் பிரிவில், 11 வயதுக்கு உட்பட்டோரில் கூடலுாரை சேர்ந்த ஆதிரை; 13 வயதுக்கு உட்பட்டோரில் அருவங்காட்டை சேர்ந்த ஹரிதா; 15 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் அருவங்காடு அனுஷ்கா, சிமோனா வெற்றி பெற்றனர்.
இந்த போட்டிகளில், சஞ்சய், மோகன்ராஜ், சாம்சன் டேவிட், மனோஜ், தீக்ஷித், மோரேஷெத், சக்ஷிகா, வினய், நேஹா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
பரிசளிப்பு விழாவில், தொழிற்சாலை பொது மேலாளர் பங்கஜ் கோயல், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முதல் இரு இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நீலகிரி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் சாய் தலைமை நடுவராக பங்கேற்றார். லூபோ ரோஸ்வால்ட் நன்றி கூறினார்.