Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அரிய வகை முறுக்கு கொம்பு மான்கள்; கண்காணிப்பில் வனத்துறை தனி கவனம்

அரிய வகை முறுக்கு கொம்பு மான்கள்; கண்காணிப்பில் வனத்துறை தனி கவனம்

அரிய வகை முறுக்கு கொம்பு மான்கள்; கண்காணிப்பில் வனத்துறை தனி கவனம்

அரிய வகை முறுக்கு கொம்பு மான்கள்; கண்காணிப்பில் வனத்துறை தனி கவனம்

ADDED : ஜன 18, 2024 10:07 PM


Google News
Latest Tamil News
கூடலுார் : மசினகுடி வனப்பகுதியில் காணப்படும், அழிவின் விளிம்பில் உள்ள, முறுக்கு கொம்பு மான்களை, வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில், புள்ளிமான், கடமான்கள் அதிகளவில் காணப்படுகிறது.

ஆனால், முறுக்கு கொம்பு மான்கள் தெங்குமரஹாடா, மாவனல்லா உள்ளிட்ட சில குறிப்பிட்ட வனப்பகுதிகளை மட்டும் வாழ்விடமாக கொண்டுள்ளது.

இவைகள் மழை காலங்களில் மேகம் ஏற்படும் போது, மகிழ்ச்சி வெளிப்படுத்த தாவித்தாவி செல்வது அழகு. மிகவும் பயந்த சுபாவம் கொண்ட இவைகள், உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் பயத்திலேயே இறந்து விடும் தன்மை கொண்டதாம்.

அழிவின் விளிம்பில் உள்ள இந்த மான்கள் தற்போது மசினகுடி பகுதிகளிலும் தென்படுவது வனத்துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், முறுக்கு கொம்பு மான்கள் தென்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.

பயந்த சுபாவம் கொண்ட இவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனி கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.

வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'அழிவின் பட்டியலில் உள்ள இதனை பாதுகாக்க, தனியாக சரணாலயம் அமைக்க வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us