Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிம்ஸ்பூங்காவில் பூத்த 'ரோடோடெண்ட்ரான்'

சிம்ஸ்பூங்காவில் பூத்த 'ரோடோடெண்ட்ரான்'

சிம்ஸ்பூங்காவில் பூத்த 'ரோடோடெண்ட்ரான்'

சிம்ஸ்பூங்காவில் பூத்த 'ரோடோடெண்ட்ரான்'

ADDED : ஜன 08, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
குன்னுார்;இமயமலையில் காணப்படும் 'ரோடோடெண்ட்ரான் ஹார்போரியம்' மலர்கள் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ளது.

இமயமலை பகுதிகளில் வளரும் அரிய வகை மரமான 'ரோடாடெண்ட்ரான் ஹார்போரியம்' உள்ளிட்ட அரியவகை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளில், கடல் மட்டத்திற்கு மேல், 2500 அடி உயரத்தில் உள்ள சோலை காடுகளில் வளர்கின்றன. நேபாள நாட்டின் தேசிய மலர்.

தமிழ் மற்றும் மலையாளத்தில், 'அலஞ்சி, காட்டு பூவரசு, மலை பூவரசு,' என, அழைக்கப்படுகிறது.

பனி காலத்தில் பூக்கும் இந்த மலர்கள் தற்போது, குன்னுார் சிம்ஸ் பூங்கா உலக வரைபடம் அருகே உள்ள பசுமை மாறா சிறிய மரத்தில் பூக்க துவங்கியுள்ளது. 'வார்பிலிங் ஒயிட் ஐ' என்ற பறவை உட்பட பிற பறவைகள் மலரில் வந்து அமர்ந்து உணவை உட்கொள்கிறது. சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

தோட்டக்கலை வேளாண் அலுவலர் (தர கட்டுப்பாடு) அமிர்தலிங்கம் கூறுகையில், ''மித வெப்ப மண்டலத்தில் பூக்கும் இந்த தாவரம். அடர் சிவப்பு மற்றும் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கிறது. இந்த தாவரத்தில் வேதியியல் திறன் அதிகம் உள்ளதால் வயிற்றுபோக்கு தலைவலி வீக்கம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us