/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரண்டாம் பருவ பாடநுால் வழங்கும் நிகழ்ச்சி இரண்டாம் பருவ பாடநுால் வழங்கும் நிகழ்ச்சி
இரண்டாம் பருவ பாடநுால் வழங்கும் நிகழ்ச்சி
இரண்டாம் பருவ பாடநுால் வழங்கும் நிகழ்ச்சி
இரண்டாம் பருவ பாடநுால் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : அக் 06, 2025 10:43 PM
கோத்தகிரி:கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் பருவ பாடநுால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில், பள்ளி மாணவர்கள், 16 பேருக்கு, நோட்டு புத்தகங்களுடன், இரண்டாம் பருவ பாடநுால்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ராஜன் மற்றும் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், சுற்றுச்சூழல் துாய்மை, புரவலர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேம்பாட்டுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில், பள்ளி ஆசிரியர்கள் சகுந்தலா, சோனியா கமலா பகல் மற்றும் சிறப்பு பயிற்றுனர் ரவி, மருத்துவர் திவ்யா உள்ளிட்டேர் பங்கேற்றனர். பொறுப்பாளர் பத்மாவதி நன்றி கூறினார்.


