Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடுதல் மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு

கூடுதல் மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு

கூடுதல் மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு

கூடுதல் மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு

ADDED : அக் 23, 2025 10:40 PM


Google News
ஊட்டி: வி வசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த ஊட்டி விதை பரிசோதனை நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

விதை பரிசோதனை நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை ஊட்டி, ரோஜா கார்டன், தோட்டக்கலை இணை இயக்குநர் வளாகத்தில் அமைந்துள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரியை கொடுத்து விதைப்பரிசோ தனை செய்து கொள்ளலாம். இந்த நிலையத்தில் விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன. ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 மட்டும் பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபரச் சீட்டுகளை கொடுத்து, விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

விதைக்கான அளவு விதை பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரதான காய்கறிகளுக்கான விதை மாதிரியின் குறைந்தபட்ச அளவு -கேரட், காலிப்ளவர், முட்டைகோஸ், புரூக்கோலி, நூல்கோல் மற்றும் டர்னிப் ஆகியவை 10 கிராம், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி 50 கிராம், பீன்ஸ் 450 கிராம், பட்டாணி 250 கிராம், பாலக்கீரை 25 கிராம் ஆகும்.

இவ்வாறு பயிருக்கேற்ப குறைந்தபட்ச விதை மாதிரியை ஊட்டி, விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து விதைப்பரிசோதனை செய்து விதையின் தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று வேளாண்மை அலுவலர் நவீன் தெரிவித் துள்ளார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us