/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ துர்கா பூஜையில் பரத நாட்டியம் நடனத்தில் அசத்திய மாணவியர் துர்கா பூஜையில் பரத நாட்டியம் நடனத்தில் அசத்திய மாணவியர்
துர்கா பூஜையில் பரத நாட்டியம் நடனத்தில் அசத்திய மாணவியர்
துர்கா பூஜையில் பரத நாட்டியம் நடனத்தில் அசத்திய மாணவியர்
துர்கா பூஜையில் பரத நாட்டியம் நடனத்தில் அசத்திய மாணவியர்
ADDED : செப் 30, 2025 10:14 PM

குன்னுார், ; அருவங்காட்டில் நடந்து வரும் துர்கா பூஜையில் பரத நாட்டிய பள்ளி மாணவியரின் நடனம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், 'நீலகிரி 'சர்போஜனின் துர்கா சப்' அமைப்பு சார்பில், 64-வது ஆண்டு நவராத்திரி துர்கா பூஜை விழா கடந்த, 28ல் துவங்கியது.
தினமும் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், அருவங்காடு நாட்டியப்பள்ளி குரு மேகனகவுடா தலைமையில், மாணவி அதிஷாவின் சிவதாண்டவம், தேக்ஷிதாவின் பெங்காளி ந டனம், மிருதுவின் பிரண வாலய நடனம், தனுஸ்ரீயின் பைரவி காளி நடனம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது . நேற்று நாட்டிய பள்ளியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட மாணவியர், பக்தி பாடல்களுக்கு பரத நாட்டியம் அரங்கேற்றினர்.


