/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அரசு பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாஅரசு பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா
அரசு பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா
அரசு பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா
அரசு பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா
ADDED : பிப் 01, 2024 10:24 PM

சூலுார்;ராசிபாளையம் அரசு துவக்கப்பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது.
சூலுார் அடுத்த ராசி பாளையம் அரசு துவக்க பள்ளியில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. தலைவர் சம்பத்குமார், சுவாமிஜியின் தேசப்பற்று குறித்து பேசினார்.
சமூக ஆர்வலர் விவேகானந்தன் பழனிசாமி பேசுகையில்,சுவாமி விவேகானந்தர் என்று சொன்னாலே தன்னம்பிக்கை ஆகும். அவரது தன்னம்பிக்கை வரிகளை படிக்க வேண்டும். அதனால், அனைத்து பாடங்களும் நம் மனதில் பதியும். அவை நமது சுய முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். ஆன்மீகத்தை மட்டுமல்ல, தேசப்பற்றையும் மக்களிடம் விதைத்தார். பாரத நாட்டின் தர்மத்தை அறிந்து கொள்ள வேண்டும். கலாசாரங்களை மீட்க பாடுபட்டார். அவர் வழி நடக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்,' என்றார்.
இயக்க நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விவேகானந்தர் வேடமணிந்து மாணவர்கள், சுவாமிஜி குறித்து பேசிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


