/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது
புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது
புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது
புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது
ADDED : அக் 01, 2025 11:41 PM
குன்னுார்; குன்னுார் புகையிலை கடத்தி வந்த கேரள நபர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் போதை வஸ்து புழக்கத்தை தடுக்க, எஸ்.பி. நிஷா உத்தரவின் பேரில், கண் காணிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஊட்டி, குன்னுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த அருவங்காடு போலீசார், பிக்கட்டி அருகே வந்த காரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை, 45 கிலோ இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து குன் னுார் டி.எஸ்.பி., ரவி மேற்பார்வையில், அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மலப்புரம் மாவட்டம், அமரம் பாலம் தொட்டக்காடு பகுதியை சேர்ந்த சந்திப்,41, என்பவரை கைது செய்தனர்.
கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம், 105 கிலோ போதை வஸ்து கடத்தி வந்ததில், சந்திப் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.


