Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தொழிலாளர்களுக்கு போனஸ் வேண்டும் தொழிற்சங்க நிர்வாகிகள்  வலியுறுத்தல் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தொழிலாளர்களுக்கு போனஸ் வேண்டும் தொழிற்சங்க நிர்வாகிகள்  வலியுறுத்தல் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தொழிலாளர்களுக்கு போனஸ் வேண்டும் தொழிற்சங்க நிர்வாகிகள்  வலியுறுத்தல் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தொழிலாளர்களுக்கு போனஸ் வேண்டும் தொழிற்சங்க நிர்வாகிகள்  வலியுறுத்தல் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ADDED : செப் 24, 2025 11:42 PM


Google News
பந்தலுார்: பந்தலுார் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பந்தலுார் எல்.பி.எப்., தொழிற்சங்க அலுவலகத்தில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, எல்.பி.எப். தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார்.

சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க தலைவர் ரமேஷ், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி., சங்க நிர்வாகி யோகநாதன், பி.டபள்யு.சி., நிர்வாகிராமு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 'டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் முன்னதாக வழங்க வேண்டும்; டான்டீ தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்கவேண்டும்; தொழிலாளர்கள் 'ரெப்கோ' உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்கு டான்டீ நிர்வாகம் உடனடி பரிந்துரை செய்ய வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 'கோரிக்கைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், நீலகிரி எம்.பி.ராசாவை சந்திப்பது,' என, முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், நகர செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாங்கோடு ராஜா, சிவானந்தராஜா, சுஜேஷ் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us