/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நெல்லியாம்பதி குடியிருப்பு பகுதியில் காட்டு யானையால் பீதி நெல்லியாம்பதி குடியிருப்பு பகுதியில் காட்டு யானையால் பீதி
நெல்லியாம்பதி குடியிருப்பு பகுதியில் காட்டு யானையால் பீதி
நெல்லியாம்பதி குடியிருப்பு பகுதியில் காட்டு யானையால் பீதி
நெல்லியாம்பதி குடியிருப்பு பகுதியில் காட்டு யானையால் பீதி
ADDED : செப் 23, 2025 08:57 PM

பாலக்காடு, ; பாலக்காடு அருகே, குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானையால் மக்கள் பீதியில் உள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி. வன எல்லையோர பகுதியில், கிராம அலுவலகம் அருகே கடந்த மூன்று நாட்களாக உலா வரும் காட்டு யானையால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இப்பகுதியில், காட்டு யானை முகாமிட்டுள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர்.
அப்பகுதியல் உள்ள பயிர்களை காட்டு யானை சேதப்படுத்துவதோடு, மரங்களில் இருந்து பழங்கள் பறித்து சாப்பிடுகிறது.
வன துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனத்தினுள் விரட்டினாலும், மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.