ADDED : அக் 01, 2025 08:12 AM
பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே ராக்வுட் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 52; தொழிலாளி. நேற்று இரவு நெலாக்கோட்டை பஜாருக்கு இவரும், இவரது மனைவி கங்கா ஆகியோர் சென்று விட்டு வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எஸ்டேட் மருத்து வமனை அருகே யானை வருவதை பார்த்து, ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தி உள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கி ராஜேஷ் ஓடி உள்ளார். அவரை துரத்தி சென்ற யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து, உடலை மருத்துவமனை கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அதே பகுதியில் யானை திரிவதால், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.


