ADDED : மே 17, 2025 01:00 AM

புதுக்கோட்டை:பிழைப்புக்காக, 98 வயது வரை பனைமரம் ஏறி, வருவாய் ஈட்டி வாழ்ந்த முதியவர், 101வது வயதில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா, 101. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தனியாக வசிக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
செல்லையா மட்டும் அவரது தோட்டத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்தார். தன் பிழைப்பிற்காக, 98 வயதுவரை பனைமரம் ஏறி, நுங்கு வெட்டி வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தினார்.
இந்நிலையில், செல்லையா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கிராம மக்கள் திரளாக அஞ்சலி செலுத்தினர்.