/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முதுகுளத்துாரில் பெயரளவில் எரியும் உயர்மின் கோபுர விளக்கு முதுகுளத்துாரில் பெயரளவில் எரியும் உயர்மின் கோபுர விளக்கு
முதுகுளத்துாரில் பெயரளவில் எரியும் உயர்மின் கோபுர விளக்கு
முதுகுளத்துாரில் பெயரளவில் எரியும் உயர்மின் கோபுர விளக்கு
முதுகுளத்துாரில் பெயரளவில் எரியும் உயர்மின் கோபுர விளக்கு
ADDED : ஜூலை 15, 2024 04:13 AM

முதுகுளத்துார் : -முதுகுளத்துார்- ராமநாதபுரம் ரோட்டிலுள்ள தனியார் பள்ளி அருகே உயர்மின் கோபுரத்தில் ஒருசில மின்விளக்கு மட்டும் எரிவதால் இருளில் மூழ்கும் சூழ்நிலை உள்ளது.
முதுகுளத்துார்- பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, தேரிருவேலி முக்குரோடு பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் ராமநாதபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே உயர்மின் கோபுரவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களாகவே உயர்மின் கோபுரத்தில் ஒருசில மின்விளக்கு மட்டும் எரிகிறது. இதனால் இரவுநேரத்தில் இருளாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அரசின் நிதியும் வீணடிக்கப்படுகிறது.
எனவே உயர் மின்கோபுரத்தில் மின்விளக்கை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.