ADDED : ஜூலை 14, 2024 05:26 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெளியக்கோட்டை பிரகதாம்பாள் சமேத அகத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன.
யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவருக்கு ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.