/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இரு தரப்பினர் மோதல்; 24 பேர் மீது வழக்கு இரு தரப்பினர் மோதல்; 24 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல்; 24 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல்; 24 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல்; 24 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 29, 2024 10:32 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி கிழக்குத் தெரு ஜமாத் தலைவர் கலீல் ரகுமான் தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சின்ன மரக்காயர் தரப்பினருக்கும் இடையே கடலுக்குள் மீன் பிடிக்க சென்றது தொடர்பான பிரச்னையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
ஜமாத் தலைவர் கலீல் ரகுமான் தரப்பில் அலி அக்பர் 50, புகாரில், சின்ன மரைக்காயர், முகமது சலீம், முகமது ரிஸ்வான் உட்பட 10 பேர் மீதும், சின்ன மரைக்காயர் புகாரில் ஜமாத் தலைவர் கலீல் ரகுமான், அலி அக்பர், முகமது அலி உட்பட 14 பேர் மீதும் திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.