/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு
ADDED : ஜூலை 16, 2024 05:45 AM
கடலாடி, : ராமநாதபுரம் மாவட்டத்தில் 143 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5வரை படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவுவழங்கப்படுகிறது.
கடலாடி ஒன்றியம் கன்னிராஜபுரம் சத்திரிய நாடார்நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் துவக்க விழாநடந்தது. அமைச்சர்ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பேசியதாவது:
காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு முதலில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரைபடிக்கின்ற மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
தற்போது அனைத்து அரசு உதவி பெறும்பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர்ஸ்டாலின் துவக்கியுள்ளார். அதன்படி மாவட்டத்தில் 143 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வரை படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது என்றார்.
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மகளிர் திட்ட இயக்குநர் சையித்சுலைமான் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.