/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
ADDED : ஜூலை 15, 2024 04:49 AM

பரமக்குடி : பரமக்குடி அனுமன் கோயில் மற்றும் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு ஜெயந்தி விழா நடந்தது.
ஒவ்வொரு ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதார திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்ஸவம் கொண்டாடப்படுகிறது.
இதன்படி நேற்று எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல் பரமக்குடி அனுமார் கோதண்டராமர்சுவாமி கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு ஜெயந்தி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.