பெண்களிடம் மோசடி சென்னை நபர் கைது
பெண்களிடம் மோசடி சென்னை நபர் கைது
பெண்களிடம் மோசடி சென்னை நபர் கைது
ADDED : ஜூலை 30, 2024 11:11 PM

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் பகுதியில் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
முதுகுளத்துார்- - கமுதி ரோடு பேரையூர் கண்மாய்க்கரை அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தனர். காரில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 52, என்பவர் மற்றும் முதுகுளத்துார் அருகே கண்ணன்பொதுவன் கிராமத்தை சேர்ந்த பெண், கருமல் கிராமத்தை சேர்ந்த மேலும் இரு பெண்கள் இருந்தனர்.
பெண்கள் மூவருக்கும் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, தலா 50,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, மோசடி செய்யும் வகையில் மருத்துவ பரிசோதனை இருப்பதாக கூறி அழைத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து ஸ்ரீகாந்தை பேரையூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி கைது செய்தார். இது போல பல பெண்கள் ஏமாற்றப்பட்டனரா என விசாரிக்கின்றனர்.