ADDED : ஜூலை 15, 2024 05:06 AM
கீழக்கரை, : -கீழக்கரையில் உள்ள புது கிழக்கு தெருவில் ஆதிப் பெண்கள் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
கீழக்கரை தொழிலதிபர் சதக் இலியாஸ் தையல் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். அலையன்ஸ் மக்கள் நல்லிணக்க தலைவர் ஹபீப் முகம்மது வரவேற்றார். மகளிர் அணி தலைமை நிர்வாகிகள் செய்யது நிஷா, முகமது சதக் உம்மா, முகமது பீவி பங்கேற்றனர்.
ஏராளமான பெண்கள் தையல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.