Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு மகளிர் கலைக்கல்லுாரியில்  ஜூன் 10 முதல் 14 வரை கலந்தாய்வு

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில்  ஜூன் 10 முதல் 14 வரை கலந்தாய்வு

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில்  ஜூன் 10 முதல் 14 வரை கலந்தாய்வு

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில்  ஜூன் 10 முதல் 14 வரை கலந்தாய்வு

ADDED : ஜூன் 06, 2024 05:28 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 2024-2025 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இளநிலை மாணவிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 10 முதல் 14 வரை நடக்கிறது.

ஜூன் 10 ல் கணிதம், மின்னணுவியல், வேதியியல்,மனையியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு 280 முதல் 400 மதிப்பெண் வரையும், 140 முதல் 279 மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு ஜூன் 11 ல் கலந்தாய்வு நடக்கிறது.

இளம் வணிகவியல் (பி.காம்., சி.எஸ்.) நிறுமச் செயலாண்மை துறைக்கு ஜூன் 12ல் 280 முதல் 400 மதிப்பெண்கள் பெற்றவர்கள், ஜூன் 13ல் 140 முதல் 279 பெற்ற மாணவிகள் பங்கேற்லாம்.

ஜூன் 14ல் தமிழ், ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் 50 முதல் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

மாணவிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, 2 மதிப்பெண் சான்றிதழ் அசல், ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ்களுடன் காலை 9:00மணிக்கு வந்து பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என முதல்வர்(பொ) மணிமாலா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us