ADDED : ஜூலை 29, 2024 10:39 PM
ராமேஸ்வரம் : மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவும், ஏழை நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை பறிக்கும் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமேஸ்வரம் நகர் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமை வகித்தார். நகர் குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, அந்தோணி பீட்டர், முனிஸ்வரன், பிச்சை, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ், சுரேஷ் கொண்டனர்.