/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருமானம் அனைத்து ரயில்களும் நிற்க மளிகை வியாபாரிகள் மனு பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருமானம் அனைத்து ரயில்களும் நிற்க மளிகை வியாபாரிகள் மனு
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருமானம் அனைத்து ரயில்களும் நிற்க மளிகை வியாபாரிகள் மனு
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருமானம் அனைத்து ரயில்களும் நிற்க மளிகை வியாபாரிகள் மனு
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருமானம் அனைத்து ரயில்களும் நிற்க மளிகை வியாபாரிகள் மனு
ADDED : ஜூலை 31, 2024 05:07 AM

பரமக்குடி : பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் மூலம் ரூ.9 கோடி வருமானம் கிடைப்பதால் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மளிகை வியாபாரிகள் மனு அளித்தனர்.
பரமக்குடியில் மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் 37வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயம் அந்துவான் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணைத்தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
சங்க பொருளாளர் அழகேஸ்வரன் நிதிநிலை, செயலாளர் நாகசுந்தரம் செயல் அறிக்கை வாசித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துச்சாமி, செந்தில் ராஜ்குமார் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
அப்போது சங்கத் தலைவர் ஜெயம் அந்துவான் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு சங்கம் எந்த வகையிலும் துணை நிற்காது என்றார்.
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் நிலையில் ரூ. 9 கோடிக்கும் மேல் வருமானம் வருகிறது.
ஆகவே அனைத்து வகை ரயில்களும் பரமக்குடியில் நின்று செல்ல மதுரை கோட்ட மேலாளர் மற்றும் நவாஸ்கனி எம்.பி., வலியுறுத்த வேண்டும்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் வேளாண் விளை பொருட்களில் அதிகமான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் போது மருந்து தன்மை வருகிறது.
அவற்றை மாதிரி எடுக்கும்போது வணிகர்கள் பாதிக்கப்படாதவாறு சட்டங்கள் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வியாபாரிகள் சங்க தலைவர் போஸ், பொதுச் செயலாளர் ஜீவானந்தம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மளிகை சங்க துணை தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.