/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கரையில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு; கண்டுகொள்ளாத அதிகாரிகள் கீழக்கரையில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரையில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரையில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரையில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூலை 15, 2024 04:45 AM

கீழக்கரை : -கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக அள்ளப்படாத குப்பையால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய்தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
கீழக்கரை 17வது வார்டிற்குட்பட்ட சாலைத்தெரு, பிரதான சாலைகளில் நான்கு ரோடு மற்றும் மூன்று ரோடு சந்திப்பு இடங்களில் குப்பை தொட்டியில் கொட்டப்பட்ட குப்பை நிரம்பியுள்ளது. மக்கள் வேறு வழியின்றி சாலையோர பகுதிகளை குப்பை கொட்டும் இடமாக்கியுள்ளனர்.
ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகள் குப்பையை கிளறுகின்றன.
சுகாதாரக் கேட்டிற்கு வழி ஏற்படுவதைப் போல் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர்.
வி.சி.கட்சியின் நகர் செயலாளர் பாசித் இலியாஸ் கூறியதாவது: கீழக்கரை நகரில் குப்பைதொட்டி நிரம்பி
மீன், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் தாக்கத்தால் அப்பகுதி முழுவதும் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கீழக்கரையில் உள்ள தெருக்களில் உடனுக்குடன் ஆய்வு செய்து தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டக்கூடாது என்றார்.