/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி அப்துல் கலாம் பள்ளியில் மாணவர் தேர்தல் பரமக்குடி அப்துல் கலாம் பள்ளியில் மாணவர் தேர்தல்
பரமக்குடி அப்துல் கலாம் பள்ளியில் மாணவர் தேர்தல்
பரமக்குடி அப்துல் கலாம் பள்ளியில் மாணவர் தேர்தல்
பரமக்குடி அப்துல் கலாம் பள்ளியில் மாணவர் தேர்தல்
ADDED : ஜூலை 15, 2024 04:33 AM
பரமக்குடி, : -பரமக்குடி புது நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவர் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.
பள்ளி மாணவர் பருவத்திலேயே தலைமை பண்புகளை வளர்க்கும் விதமாக இப்பள்ளியில் மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படுவது போல் அனைத்து வகை தேர்தல் பணிகளையும் மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு மாணவரும் வரிசையில் நின்று விரலில் மை வைத்து ஓட்டுப் பதிவு சீட்டை பெற்று ஓட்டு செலுத்தினர்.
பள்ளி தாளாளர் முகைதீன் முசாபர் அலி பங்கேற்று முதல் வாக்களித்தார்.
தொடர்ந்து பள்ளி முதல்வர்கள் அணில் (செகண்டரி), ஜெயசுதா (பிரைமரி) மற்றும் ஆசிரியர்களும் வாக்களித்தனர்.