பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல்
பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல்
பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல்
ADDED : ஜூலை 29, 2024 10:40 PM

பட்டணம்காத்தான் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் பட்டணம்காத்தான் பழைய செக்போஸ்ட் அருகில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி பட்டயத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ரோட்டரி சங்க தலைவர் ஜெகதீஸ், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மதன்குமார் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் சங்கீதா, ஆசிரியர்கள் செய்தனர்.