/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்
எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்
எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்
எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்
ADDED : ஜூன் 16, 2024 04:48 AM

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள்கோயிலில் வைகாசி வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது.
எமனேஸ்வரத்தில் பெருந்தேவி, வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வைகாசி வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல்உற்ஸவம் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வைகாசி கடைசி வெள்ளிக் கிழமையில் தாயார் மண்டபத்தில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் ஊஞ்சலில் சேவை சாதித்தனர்.
அப்போது பஜனை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.